ரன்வீர் ஷா பண்ணை வீட்டில் 80 பழங்கால சிலைகள் மீட்பு

ரன்வீர் ஷா பண்ணை வீட்டில் 80 பழங்கால சிலைகள் மீட்பு

1 mins read
eb3598aa-d1b5-4c13-b77e-6dbe3445d6b0
-
Google News Preferred Icon

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்திய போலிசார் அங்கிருந்து 80 பழங்காலச் சிலை களை மீட்டனர். ரன்வீர் ஷாவின் வீடுகளில் கடந்த 27ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் தொடர் சோதனையில் இது மூன்றாவது முறையாகும். சோதனையின்போது, வீடு முழு வதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 80 சிலைகளுக்கும் முறையான ஆவ ணங்கள் இல்லாததால் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் அவற்றைப் பறி முதல் செய்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், "கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் ஒரு மாதத்துக்குள் தங்களிடம் இருக்கும் சிலைகளைத் தாமாகவே முன்வந்து திருப்பிக் கொடுத்துவிட்டால் கடும் தண்டனை யில் இருந்து தப்பிக்கலாம். இல்லையெனில் கடத்தல் சிலை களை வைத்திருப்போர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது இருக்கும். "கடத்தல் சிலைகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் தாமாகவே வந்து தகவல்களை அளிக்கலாம். "சிலைக் கடத்தலில் தொடர் பில்லாதவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். குற்றமற்றவர்கள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்படாது. சிலைக் கடத்தல் தொடர்பாக அறநிலையத் துறை யின் மேலும் ஒன்பது அதிகாரி களை விசாரிக்கவேண்டிய தேவையுள்ளது," என்றார்.