அமைச்சர் வேலுமணி: பலகோடி ரூபாய் ஊழல் வழக்கை நான் சந்திக்கத் தயார்

அமைச்சர் வேலுமணி: பலகோடி ரூபாய் ஊழல் வழக்கை நான் சந்திக்கத் தயார்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: பலகோடி ரூபாய் மதிப்புக்கு நான் ஊழல் புரிந்துள்ள தாக என் மீது திமுக தொடர்ந் துள்ள வழக்கை சட்டப்படி நீதி மன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். "சட்டவிரோதமாகக் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மூலம் அமைச்சரின் உறவினர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகைக்கடைகளையும் ஹோட்டல்களையும் நடத்தி வருகின்றனர். "இதன் காரணமாக அமைச்சர் வேலுமணி மீது சிறப்புப் புல னாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்," என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ளார். இந்தப் புகாருக்கு ஆதரவாக ஏராளமான ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வுள்ளது.

"உள்ளாட்சித் துறையில் ஒப்பந் தங்கள் அனைத்தும் நேர்மையாக, விதிமுறைகளுக்கு உட்பட்டே போடப்பட்டுள்ளன. "என் மீது திமுக தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக் கத் தயாராக இருக்கிறேன். நீதி மன்றத்தில் எனக்கு நீதி கிடைக் கும்," என்று விளக்கம் அளித் துள்ளார் வேலுமணி. ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாநக ராட்சி, நகராட்சிகளில் அமைச்சர் வேலுமணி உத்தர வின்படியே அவர் கைகாட்டும் நபர்களுக்கு ஒப் பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.