குளிரூட்டியில் வாயு கசிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

குளிரூட்டியில் வாயு கசிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

1 mins read
Google News Preferred Icon

சென்னை: கோயம்பேட்டில் குளிரூட்டியில் (ஏ.சி.) மின்கசி வால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறி ஒரே குடும்பத் தைச் சேர்ந்த மூவர் உறங்கிய நிலையிலேயே உயிரிழந்தது சுற்று வட்டாரத்தினரை சோகத்தில் உறைய வைத்துள்ளது. கோயம்பேட்டைச் சேர்ந்த சரவணன் தனியார் உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்றிரவு சரவணன், அவரது மனைவி கலையரசி, 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வீட்டில் ஏ.சி.யைப் போட்டுக் கொண்டு உறங்கியுள்ளனர். விடிந்து வெகுநேரம் ஆகியும் சரவணன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்தபோது மூவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.