விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள்; டெல்லி அருகே பதற்றம்

2 mins read
9ff9efef-fb2a-42c3-8894-4c4ffa362aa1
-

இந்தியாவின் உத்தரப்பிரதேசம், மத் திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். பயிர்க்கடன் தள்ளுபடி, மின்கட்டணச் சலுகை, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலி யுறுத்தி அவர்கள் போராடி வருகின் றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக பாரதிய விவசாயிகள் சங்கம் (பிகேயு) சார்பில் சென்ற மாதம் 23ஆம் தேதி ஆயிரக்கணக்கானோர் ஹரித்துவா ரிலிருந்து டெல்லிக்குப் பேரணியாகப் புறப்பட்டனர். பேருந்து, டிராக்டர், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங் களில் அவர்கள் தலைநகர் டெல்லி நோக்கிச் சென்றனர்.

இந்நிலையில், டெல்லி- உத்தரப் பிரதேசம் எல்லைப் பகுதியான காசியா பாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற விவசாயிகள் பேரணியை நேற்றுக் காலை போலிசார் தடுத்து நிறுத்தினர். டெல்லிக்குள் நுழையக் கூடாது என்று விவசாயிகளுக்கு போலிசார் உத்தர விட்டனர். மேலும், டெல்லி, கிழக்கு டெல்லி பகுதிகளில் வரும் திங்கட்கிழமை வரை தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டது. ஆனால், உத்தரவுகளை மீறி டெல்லிக்குள் செல்ல முயன்றபோது விவசாயிகளுக்கும் போலிசாருக்கு மிடையே தள்ளுமுள்ளு ஏற்றப்பட்டது. கிட்டத்தட்ட 50,000 விவசாயிகள் ஒன்றுதிரண்டதாகவும் அவர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததாகவும் தெரிவிக்கப்பட் டது. இதனால், அந்த டெல்லி-உத் தரப் பிரதேச தேசிய நெடுஞ்சாலை போர்க்களம் போல் காட்சியளித்தது.

ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரண்டு போராடிய விவசாயிகளைக் கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. படம்: இபிஏ