தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி: நேப்பாள இளையர்கள் இருவர் அதிரடிக் கைது

தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி: நேப்பாள இளையர்கள் இருவர் அதிரடிக் கைது

1 mins read

சென்னை: தனியார் வங்கிக்கிளையில் கொள்ளையடிக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில் நேப்பாள நாட்டைச் சேர்ந்த இருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் நால்வருக்கு வலை வீசப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள ராமாபுரத்தில் தனியார் வங்கியின் கிளை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில் இந்த வங்கிக் கிளை இயங்கும் கட்டடத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வெளிச்சம் தென்படுவ தாகவும் உள்ளே சிலர் நுழைந் திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த வங்கியின் மும்பை தலைமையகத் தில் இருந்து சென்னை போலிசாருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. வங்கியில் கொள்ளை முயற்சி நடக்கும் பட்சத்தில் அங்குள்ள அபாய மணி அடிக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்ற நிலையில் ராயலா நகர் போலிசார் உடனடியாக வங்கிக் கிளைக்குச் சென்று பார்த்தனர். அங்கு யாரும் தென்படாத நிலையில் எரிவாயு சிலிண்டர் ஒன்றும், வெட்டுக்கருவி ஒன்றும் இருப்பது தெரியவந்தது.