ஹைட்ரோ கார்பன் திட்டம்: வெளிநாட்டு தமிழர்கள் புகார்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: வெளிநாட்டு தமிழர்கள் புகார்

1 mins read
beca7f05-c139-40e9-8c4c-0a9fc15d2cc5
-

தஞ்சை: தமிழகத்தில் மூன்று பகுதிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது விவசா யிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பி னருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இத்தகைய ஒவ்வொரு அறிவிப்பும் தங்களது வாழ்வாதாரத்துக்கு மொத்தமாக குந்தகம் விளைவிப்பதாக உள் ளது என தஞ்சை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கடந்த 1ஆம் தேதி ஒப்பந்தங்கள் கையெழுத் தாகி உள்ளன.

இந்நிலையில், உலகின் பல் வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என சமூக வலைத்தளங்கள் வழி தங்களது கவலையை, அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக மக்கள் பாதிக்கப்படுவது குறித்து மாநில அரசு கவலைப்படுவதாகத் தெரிய வில்லை என குவைத் வாழ் தமிழர்கள் சார்பில் கலீல் பாகவி என்பவர் குற்றம்சாட்டி உள்ளார்.

நெடுவாசலில் போராட்டம் நடத்திய பொதுமக்கள். கோப்புப்படம்