குமரி: வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்திலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்க்கிறது. குறிப்பாக, குமரியில் நேற்று முன்தினம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் கனமழை பெய்தது. தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இது வரும் 6ஆம் தேதி முதல் வலுப்பெறும் என்றும், அது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசைநோக்கி நகரத் தொடங்கும் என்றும், அப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப் புள்ளதாகவும் வானிலை நிலையம் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் குமரி மாவட் டத்தில் பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் மதியம் 1 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை சில மணி நேரங்கள் நீடித்தது. விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்ததாக குமரி பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். குழித் துறை, குளச்சல் குறுந்தன்கோடு, முள்ளங்கிவிளை, மயிலாடி வட்டா ரம் உள்ளிட்ட பகுதிகளில் 7 செமீ அளவு மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையோரப் பகுதியான பால மோடில் நீடித்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித் துள்ளது.

