இருமியதால் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி

இருமியதால் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி

1 mins read

சேலம்: ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்ட மூதாட்டியை மிதிவண்டி நிறுத்துமிடத்தில் வீசிச் சென்ற அரசு மருத்துவமனை ஊழியர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரூவைச் சேர்ந்த 65 வயதான மேரி என்பவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் சேலத்தில் உள்ள தனது சகோதரியைக் காண வந்த அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு திடீரென தீவிரமடைந்தது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அன்றைய தினம் இரவு முழுவதும் மேரி கடுமையாக இருமியபடி இருந்துள்ளார்.

இதனால் எரிச்சலடைந்த மருத் துவமனை ஊழியர்கள் இருவர், மேரியைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று மருத்துவமனை வளாகத்தில் மிதிவண்டிகள் நிறுத்தப்படும் இடத்தில் வீசிச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் அங்கு அழுதபடி இருந்த மேரியின் பரிதாப நிலை குறித்த விவரம் மறுநாள் வெளியே பரவத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவ மனை ஊழியர்களில் யார் இவ் வாறு செய்தது என்ற விசாரணை நடந்து வருகிறது.