ஏழு பேர் விடுதலையை எதிர்த்து போராட்டம்

ஏழு பேர் விடுதலையை எதிர்த்து போராட்டம்

1 mins read
01b531fb-4151-44f1-a3c6-fb935914527f
-

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய காங்கிரஸ் வழக்கறிஞர் அய்யலுச்சாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 7 பேரை விடுவிக்கக் கூடாது என வலியுறுத்திய அவர் நேற்று முன்தினம் கோவில்பட்டியில் திடீரென சாகும் வரை உண்ணாவிரதப் போராட் டத்தைத் தொடங்கினார். முன் அனுமதியின்றி அவர் போராட் டத்தில் ஈடுபட்டதாகக் கூறி போலிசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. படம்: தகவல் ஊடகம்