கனமழை: தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

தமிழகத்தில் நாளை மறுநாள் 7ஆம் தேதி ஞாயிற்றுக்க்கிழமை பெருமழை, அதாவது ஒரே நாளில் 25 சென்டிமீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்க்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களிலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். அதன் காரணமாக ஏற்பட வாய்ப்புள்ள பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் நிகழும்போது அதனைக் கையா ளும் விதமாகத் தமிழகத்தில் 1,275 இளையர் களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நிவாரண முகாம்களைத் தயார்நிலையில் வைத்திருக்கும்படி மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல, அதே நாளில் கேரளாவின் திருச்சூர், இடுக்கி, பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் அவசர கூட்டத்தைக் கூட்டி, அந்த மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களும் மீனவர்களும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்துமாறு அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே, தமிழகத்திலும் புதுச்சேரி யிலும் அடுத்த மூன்று நாட்களுக்குப் பரவ லாக மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி, புயலாக மாறும் என்றும் அந்தப் புயல் ஓமான் கடற் கரை நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் கன்னியாகுமரி, கேரளா, லட்சத் தீவை ஒட்டியுள்ள கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருப்போர் உடனடியாக கரை திரும்புமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!