மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந் துள்ளது. இறக்குமதியாளர் கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவது ரூபாயின் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படு கிறது. நேற்று வர்த்தக நேரம் தொடங்கிய போது இந்திய ரூபாயின் மதிப்பு 44 காசுகள் சரிந்து 73.77 என்ற நிலையை எட்டியது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு 73.34 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந் துள்ளதால் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன.
ரூபாய் வீழ்ச்சி
1 mins read

