கையெழுத்து சரியில்லை; மருத்துவர்களுக்கு அபராதம்

கையெழுத்து சரியில்லை; மருத்துவர்களுக்கு அபராதம்

1 mins read

லக்னோ: இந்தியாவில் மருத்துவர் களின் கையெழுத்து பொதுவாக புரியாது. இதற்கென்று தனித் திறமை பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் புரியாமல் எழுதிய மூன்று மருத்துவருக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நீதிமன்றம் அபராதம் விதித்துள் ளது. மூன்று மருத்துவர்களும் தலா 5,000 ரூபாயை அபராதமாகக் கட்டினர். உத்தரப்பிரதேசத்தில் சிதாபூர், உன்னாவோ, கோண்டா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குறிப்புகளையும் மருத்துவச் சீட்டு களையும் எழுதி கொடுத்தனர். ஆனால் அவர்களின் கை யெழுத்து புரியாததால் குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை வாங்க முடியவில்லை. மருத்துவ குறிப்பு புரியாததால் மேல் சிகிச்சைக்கும் நோயாளிகள் செல்ல முடிய வில்லை.

இதனால் மருத்துவர் உன்னாவோவைச் சேர்ந்த டி.பி. ஜெய்ஸ்வால், சிதாபூரைச் சேர்ந்த பி.கே. கோயல், கோன்டாவைச் சேர்ந்த ஆ‌ஷிஸ் சக்சேனா ஆகிய மூவர் மீது அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், புரியாமல் எழுதிய மூன்று மருத்துவர்களுக்குத் தலா ரூ.5,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.