புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்தும் மத்திய அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட் டது. இதையடுத்து முதல் கட்டமாக அசாமில் இருந்த ஏழு ரோஹிங்யா அகதிகளை நேற்று கடும் எதிர்ப்பு களுக்கு இடையே இந்தியா அரசு உடனடியாக நாடு கடத்தியது. சென்ற 2012ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்ததாகக் கூறப்படும் ஏழு ரோஹிங்கியா அகதிகளும் தற்காலிகமாக அசாமில் உள்ள சில் சார் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
எழுவரும் மணிப்பூர் மாநிலத் தில் மியன்மார் எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டு மியன்மார் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் நாடு கடத்துவதற்கு முன்னதாக நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. பொதுநல வழக்குகளில் முன்னிலையாகும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மனுவைத் தாக் கல் செய்திருந்தார். அதில், ஏழு அகதிகளையும் நாடு கடத்துவதைத் தடுக்க அவ சர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்தியாவின் ஜம்முவில் புறநகர் பகுதியில் உள்ள தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகள். கோப்புப் படம்

