இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

1 mins read
28fbe274-c2f7-4198-9a9a-935fa8d34835
-

புதுடெல்லி: ரஷ்யாவிடம் ஆயுதங் களை வாங்கக்கூடாது என்றும் மீறினால் பொருளியல் தடைகள் விதிக்கப்படும் என்றும் இந்தி யாவை அமெரிக்கா எச்சரித் துள்ளது. ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புட்டின் இரண்டு நாள் அதிகாரத் துவப் பயணமாக இந்தியா வந் துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் இன்று அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். அப்போது, தற்காப்பு, அணு சக்தி, விண்வெளி, பொருளியல் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருபது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனக் கூறப் படுகிறது.

இவற்றுள் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, தரையிலிருந்து ஏவுகணைகளைச் செலுத்தி எதிரிகளின் விமானங்களை அழிக்கும் திறன்படைத்த 'எஸ்- 400' ஏவுகணைப் பாய்ச்சும்' ஒப்பந்தம்தான். மொத்தம் ஐந்து எஸ்-400 ஏவுகணைப் பாய்ச்சும் சாதனங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் என்றும் இதற்கு ரூ.40,000 கோடிக்கும் மேல் செலவாகலாம் என்றும் கூறப் படுகிறது. இந்நிலையில், எஸ்-400 தொடர்பில் இந்தியா, ரஷ்யா இடையே எந்த ஒப்பந்தமும் இடம் பெறக்கூடாது என்றும் மீறினால் இந்தியா கடும் பொருளியல் தடைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி சாலைகளில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோரின் படமுள்ள பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் புட்டினை வரவேற்கும்விதமாக இந்தப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி