எஸ்-400 ரக ஏவுகணைப் பாய்ச்சிகளை வாங்குவது உட்பட எட்டு முக்கிய ஒப்பந்தங்களை இந்தியா, ரஷ்யாவுடன் செய்து கொண்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் 19வது இந்திய=ரஷ்ய வருடாந்திர உச்சநிலை மாநாட் டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ளார். இரண்டு நாள் இந்தியப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.
பின்னர் அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது இல்லத்தில் இரவு விருந்து அளித்துச் சிறப்பித்தார். டெல்லியில் உள்ள ஹைதரா பாத் இல்லத்தில் பிரதமர் மோடி யும் அதிபர் புட்டினும் நேற்று சந்தித்துப் பேசினர். அதன்பின் நடந்த உச்சநிலை மாநாட்டில் ரஷ்ய துணைப் பிர தமர் யூரி போரிசோவ், வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ், வர்த்தக, தொழில் அமைச்சர் டெனிஸ் மன்டுரோவ் உள்ளிட்ட ரஷ்யப் பேராளார்களும் இந்தியப் பேராளர்களும் பங்கேற்றனர்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் தம்மைச் சந்திக்க வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை (இடது) ஆரத் தழுவி வரவேற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படம்: ராய்ட்டர்ஸ்

