வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இன்னும் நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்து இருக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளாவின் திருச்சூர், இடுக்கி, பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளை கன மழை கொட்டித் தீர்க்கும் என ஏற்கெனவே சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த எச்சரிக்கை குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக் குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் ஏற்கெனவே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்போர் உடனடியாக கரை திரும்பும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும் பாததால் அவர்களின் குடும்பத் தினரும் உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், ஆழ்கடல் பகுதி களில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களைப் பாதுகாப்பாகக் கரை திரும்பச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்றும் மழை தொடர்ந்த தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையில் விமானங்களின் வருகையும் புறப் பாடும் தாமதமாகின. நாளை மறுநாள் 8ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வும் அதே நாளில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவா கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

