சென்னை: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச் சகத்தின் வழிகாட்டுதலின்படி 2014ஆம் ஆண்டு முதல் 'தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி' என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 2017-18ஆம் ஆண்டில் தூய்மைப் பள்ளிக்கான தேசிய அளவிலான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆறு பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் வழங்கிய தேசிய தூய்மைப் பள்ளி விருதுகளை யும் தேசிய தூய்மைப் பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங் களின் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடமும் பிடித்தது.
தமிழகத்தில் ஆறு அரசு பள்ளிகளுக்குத் தேசிய தூய்மைப் பள்ளி விருதும் தேசிய அளவில் தமிழகம் 2வது இடமும் பெற்றதற்கான சான்றிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். படம்: ஊடகம்

