ஹாங்காங்: ஹாங்காங்கில் 97 வயது மூதாட்டி தாம் ஓட்டி வந்த காரை மெசரட்டி காரின் மீதும், மேரியட் ஹோட்டல் சுவரின் மீதும் மோதி, கடுமையான காயங்கள் ஏதுமின்றி நூலிழையில் தப்பி இருக்கிறார். ஃபிரான்பீஸ் ஜோவன் லியோங் (படத்தில் வலது: தி ஸ்டார்) எனும் அந்த மூதாட்டி தமது ஹோண்டா காரை ஹோட்டலுக்கு வெளியே நிறுத்த முயன்றபோது அவர் மெசரட்டி காரின் மீது மோதியதாக தி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டது. சுமார் $314,125 மதிப்பிலான மெசரட்டி காரின் மீது அவர் மோதியபோது அதிர்ஷ்டவசமாக காருக்குள் யாரும் இல்லை என்று கூறப்பட்டது. ஹோண்டா காரின் முன்புறமும் சுமார் ஈராண்டுகளுக்கு முன்பு வாங்கப் பட்ட மெசரட்டி காரின் பின்புறமும் சேதம் அடைந்தன.
மெசரட்டி மீது ஹோண்டா காரை மோதிய 97 வயது பெண் ஓட்டுநர்
1 mins read
-

