பல கோடி ரூபாய் ஊழல்: ஆளுநருக்கு அரசு பதில்

பல கோடி ரூபாய் ஊழல்: ஆளுநருக்கு அரசு பதில்

1 mins read
806aef86-3810-4d28-a055-d9a0764cb3a4
-
Google News Preferred Icon

சென்னை: தி.நகரில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண் டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டது. "துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டு நான் வருத்தமடைந்து, அதை மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படை யில்தான் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். "இதுவரை ஒன்பது துணை வேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன்," என்று தெரி வித்துள்ளார்.

பொதுவாகவே, துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழக ஆளு நரே இவ்வாறு வெளிப்படையாக அதை ஒப்புக்கொண்டிருப்பது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆளுநரின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழ கன், ‚"துணைவேந்தர் நியமனத் துக்கும் உயர்கல்வித் துறைக்கும் சம்பந்தமில்லை. "துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே. தேடுதல் குழு அமைப் பதுடன் அரசின் பணி முடிந்து விடுகிறது," என்றார்.