சென்னை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலிஸ் படை போயஸ் கார்டன் கஸ்தூரி அவென் யூவிலுள்ள தனியார் நிறுவனத் துக்குச் சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. சைதாப்பேட்டையில் வசித்து வரும் நடிகரும் தொழிலதிபருமான ரன்வீர் ஷா வீட்டிலிருந்து 80க்கும் அதிகமான சிலைகளைப் பறிமுதல் செய்தனர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்.
அதைத் தொடர்ந்து, அவ ருக்குச் சொந்தமான அரண்மனை மற்றும் அலுவலகத்திலும் தொடர்ந்து சோதனை நடத்தினார் பொன்.மாணிக்கவேல். இதை யடுத்து 100 ஆண்டுகளுக்குப் பழமையான சிலைகள் யாரிடமா வது இருந்தால், அதைப் போலி சாரிடம் ஒப்படைக்கச் சொல்லி அறிவுறுத்தினார் பொன்.மாணிக்க வேல். இந்நிலையில், ஆந்திராவில் கேசிபி சிமென்ட் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. அந்த நிறுவனத் தில் ஓர் இயக்குநராக ரன்வீர்ஷா இருக்கிறார்.
இந்த நிறுவனத்துக்குச் சொந் தமான ஆடம்பர பங்களா போயஸ் கார்டன், கஸ்தூரி அவென்யூவில் இருக்கிறது. நேற்று முன்தினம் மாலை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்தப் பங் களாவில் ஆய்வு செய்தனர். பங்களாவின் தோட்டப்பகுதி யில் சிலைகள் புதைக்கப்பட்டிருக் கலாம் என்ற தகவலையடுத்து, தோட்டம் முழுவதையும் தோண்டி ஆய்வு செய்தனர் அதிகாரிகள். இதுவரை மூன்று அடி உயரத் தில் ஒரு சிலையை மண்ணிலிருந்து தோண்டி எடுத்திருக்கிறார்கள்.

