சென்னை: "தமிழகத்தை ஒதுக்கி விட்டு எழுதப்படும் இந்திய வர லாறு முழுமையான தேசத்தின் வரலாறாக இருக்க முடியாது. எனவே, தமிழக வரலாற்றை இந் திய மக்கள் அனைவரும் அறியும் வகையில் தேசிய வரலாறு படைக் கப்படவேண்டும்," என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலி யுறுத்தினார். தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை யின் வெள்ளி விழா ஆண்டு ஆய்வரங்கம் சென்னை பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் கலந்துகொண்டு பேசிய ஓபிஎஸ், "தமிழ்நாட்டை மறைத்து விட்டோ ஒதுக்கிவிட்டோ எழுதப் படும் இந்திய வரலாறு என்பது ஒரு முழுமையான தேசத்தின் வரலாறாக, தேசிய வரலாறாக இருக்க முடியாது. "தமிழ், திராவிடம் என்கிற பண்பாட்டு மரபுகள், திராவிட மொழிக் குடும்பம், சைவ, வைணவ மரபு கள், கோயில் சிலை வழிபாடுகள், திராவிடக் கலைகளான தென் னிந்திய கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் தோற்றம்,
வளர்ச்சி ஆகியவை, இந்தியா வின் வைதீகம் உள்ளிட்ட பல் வேறு மரபுகளில் மிகப் பெரிய தாக்கங்களையும் மாற்றங்களை யும் ஏற்படுத்தியுள்ளன. "இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து, பேரரசை உருவாக்கிய ஒரே அரச வம்சம் தஞ்சையைச் சார்ந்த சோழர் வம்சம்தான். "அது மட்டுமின்றி, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பண் பாடு, கலைகளில் பெரும் மாற்றங் களைக் கொண்டு வந்தவர்களும் தமிழர்களே. "அதனால்தான் தமிழ் மண் ணில் சமணம், பெளத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்து வம் ஆகியன செழித்து வளர்ந்தன.
"ஆனால், இந்திய வரலாறு வரையப்படும்போது இதனைக் கருத்தில் கொள்ளாமல், கங்கைக் கரையை மையமாக வைத்து வரையப்பட்டது. "அதனால்தான் தென்னிந் தியா=தமிழகம் போன்றவற்றின் பண்பாடுகள் புறக்கணிக்கப்படக் கூடிய துணை மரபுகளாக இருந் தன. "கங்கை கரை நாகரிகங்களின் விரிவாக்கம் மட்டுமே இந்திய வரலாறு என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது தவறான அணுகுமுறை என்பதால்தான், வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்றாளர்கள் இந்திய வரலாறு காவிரிக் கரையிலிருந்து துவங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினர். ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை," என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

