தமிழகத்தில் மேலும் சில நாட் களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சிவப்பு எச்சரிக்கை நேற்று திரும்பப் பெறப்பட்டது. தமிழகத்தில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் கடல் கொந்தளிப் புடன் காணப்படும் என்பதால் குமரிக் கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளபோதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாகப் பேரிடர் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு மையத் திலிருந்து 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மதுரை, ஊட்டி, கோவை, குமரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு விரைந்துள் ளனர். பேரிடர் மீட்பு அதிகாரிகள் தங்களுடன் மரம் அகற்றும் கருவிகள், ஃபைபர் படகுகள், நீச்சல் வீரர்களுக்கான உடைகள் எனப் பல்வேறு கருவிகளுடன் தயாராக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது இது தவிர, கேரளாவிற்கும் பேரிடர் மீட்பு மையத்தைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் சென்றுள்ளன. ஏற்கெனவே திருச்சூரில் 3 குழுக்கள் தயார்நிலையில் இருப்ப தாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரக்கோணம் அருகில் பேரிடர் தாக்கும் பகுதி கள் என எட்டு கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களில் பேரிடர் ஏற்பட்டால் அங்குள்ள மக்களைக் காப்பாற்ற தொண்டூழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேரிடரின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.

