'இந்தியாவுடன் சிங்கப்பூர் தொடர்ந்து ஒத்துழைக்கும்'

'இந்தியாவுடன் சிங்கப்பூர் தொடர்ந்து ஒத்துழைக்கும்'

1 mins read
5508b0f5-d087-4780-bf53-806e45e3136b
-

இந்தியாவுடன் பல்வேறு வகை களில் ஒத்துழைக்கத் தயார்நிலை யில் இருக்கும் சிங்கப்பூரின் கடப்பாட்டை வர்த்தக விவகாரங் களுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மறு உறுதிப்படுத்தியுள்ளார். உத்தர காண்ட் மாநிலத்தில் நேற்று நடை பெற்ற முதலீட்டாளர்கள் உச்ச நிலைக் கூட்டத்தில் திரு ஈஸ்வரன் இதனைக் குறிப்பிட்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப் பட்ட இந்தக் கூட்டத்தில் உணவு பதப்படுத்துதல், சுற்றுலா, மருந் தியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் பற்றி எடுத்துரைக்கப் பட்டது. 'சீக்கா' எனப்படும் விரி வான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டின் மூன்றாவது மறு ஆய்வில் மின்னிலக்கப் பொருளி யலின் தொடர்பில் மேம்பட்ட ஒத் துழைப்பு வாய்ப்புகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர்.

உத்தரகாண்ட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் உச்சநிலைக் கூட்டத்துக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடியும் அமைச்சர் ஈஸ்வரனும் சந்தித்து, விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு போன்ற முக்கியமான ஒப்பந்தங்கள் மூலம் இரு நாடுகளின் உறவைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல உறுதி தெரிவித்தனர். படம்: வர்த்தக தொழில் அமைச்சு