நாயிடம் மன்னிப்புக் கேட்க மறுத்தவர் குத்திக் கொலை; சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு

நாயிடம் மன்னிப்புக் கேட்க மறுத்தவர் குத்திக் கொலை; சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு

1 mins read

இன்னும் ஒரு சில நிமிடங்களில் தமது மினி டிரக் வாகனத்தை நிறுத்திவிட்டு வீடு சென்றிருக்க வேண்டிய விஜேந்தர் ரானா, சமையலறைக் கத்திகள், திருப்புளி ஆகியவற்றால் ஆறு முறை குத்தப்பட்டு உயிரிழந்த சோகம் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் நடந்துள்ளது. நள்ளிரவைக் கடந்த வேளை யில், சகோதரர்கள் அங்கித், பரஸ் ஆகியோர் தங்களுடைய கறுப்பு நிற லேப்ராடர் நாயை அழைத்துக் கொண்டு நடைப்பயிற்சிக்காகச் சென்றிருந்தனர். அவர்களுடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் தேவ் சோப்ராவும் அவர்களுடன் சென்றி ருந்தார். தெருவின் ஒருபுறத்தில் மூவரும் உரையாடிக்கொண்டிருந் தனர். சாலையின் மறுபுறத்தில் நாய் நின்றுகொண்டிருந்தது.

வேலை முடிந்து திரும்பிய விஜேந்தர் ரானா, தம்முடைய வீட்டுக்கு அருகில் உள்ள காலியிடத்தில் டிரக்கை நிறுத்தச் சென்றார். அங்கு நின்றுகொண்டி ருந்த அங்கித்தின் நாய் மீது விஜேந்தரின் வாகனம் உரசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த நாய், விஜேந்தரின் வாகனத்தைப் பார்த் துக் குரைத்தது. அதனைத் தொடர்ந்து, அங்கித், பரஸ், தேவ் ஆகிய மூவரும் விஜேந்தரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, நாயிடம் மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தினர். அதற்கு மறுத்த விஜேந்தரை அங்கித், பரஸ் சகோதரர்கள் கைகலப்புக்கு இழுத்தனர். ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர்கள் கத்தி, திருப்புளி ஆகிய ஆயுதங்களால் விஜேந்தரை தாக்கினார்.