ரகசியங்களை வெளியிடுவேன்: தினகரன் புது எச்சரிக்கை

ரகசியங்களை வெளியிடுவேன்: தினகரன் புது எச்சரிக்கை

1 mins read

பெங்களூரு: முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பதவியில் இருந்து இறக்கி விட வேண்டும் எனும் திட் டத்துடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் செயல் பட்டு வருவதாக அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் கூறினார். எப்படியேனும் முதல்வர் பதவியைப் பிடிக்கவேண்டும் என்பதே பன்னீர்செல்வத் தின் விருப்பம் என பெங்க ளூருவில் செய்தியாளர்களி டம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் துரோக சிந்தனை கொண்டவர் என்றும், அவர் தம்மை ரகசியமாகச் சந்தித்தது உள்ளிட்ட பல்வேறு விஷ யங்கள் தொடர்பான ரகசி யங்களைத் தாம் அடுத்த டுத்து வெளியிடப்போவ தாகவும் தினகரன் மேலும் தெரிவித்தார்.

"தம்மை மிரட்டி முதல் வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக ஓபிஎஸ் என் மீது குற்றம் சாட்டியுள் ளார். ஆனால் அவரே ரகசியமாக வந்து என்னைச் சந்தித்துள்ளார். கடந்த செப்டம்பர் கடைசி வாரம் கூட என்னைச் சந்திக்க விரும்பினார் பன்னீர்செல் வம். தமிழக பாஜக தலைவி தமிழிசையை நான் ஒரு முறை கூட நேரில் கண்ட தில்லை என்றார்," என்றார் தினகரன்.