சென்னை: நாடாளுமன்றத் தேர் தலை ஒட்டிப் பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்கான வியூகங்களைச் சத்தமின்றி வகுத்து வருகின்றன. இந்நிலையில் அரசியல் களம் கண்டுள்ள நடிகர்களும், இனி களம் காணப்போகும் நடிகர்களும் ஆளும் அதிமுகவுக்குப் புதுச் சவாலாக விளங்கி வருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரி வித்துள்ளனர். அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்க ளான ரஜினி, கமல்ஹாசன், விஜய், விஷால், சரத்குமார் உள்ளிட்டோர் தமிழக ஆட்சியாளர்களை நேரடி யாகவோ அல்லது மறைமுகமா கவோ விமர்சித்து வருகின்றனர். ரஜினியைப் பொறுத்தவரை பாஜக வுடன் கூட்டணி அமைப்பார் என்று ஆரூடம் கூறப்படுகிறது.
அதற்கு நேர்மாறாக கமல் ஹாசன் கம்யூனிஸ்ட், காங்கிரசு டன் கரம் கோர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவர் மட்டுமல்லாது மற்ற நடிகர் களும் கூட அதிமுகவுக்கு எதி ரான நிலைப்பாட்டையே கொண்டி ருப்பதாகத் தெரிகிறது. "ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் தொண்டர் களை ஈர்க்கும் ஆற்றல் பெற்ற தலை வர்கள் யாரும் உருவெடுக்க வில்லை. தனி ஒருவராக கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் தற்போது அத்தகைய வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய தலைவர்கள் அக்கட்சி யில் இல்லை. "இந்நிலையில் திரையுலகத்தி னர் அதிமுக ஆட்சியை விமர் சிப்பது தேர்தல் நேரத்தில் கட் சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு," என்று அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

