'முதலீட்டிற்கு இந்தியா தலைசிறந்த இடம்'

1 mins read

உலகில் இப்போது முதலீடு செய்ய தலைசிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது என்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் சமூக, பொருளியல் மாற்றங்கள் பெரிய அளவில் இடம்பெற்று வருவதாக மோடி கூறினார். உத்தர காண்ட் மாநிலத்தில் டேராடூ னில் நடந்த முதலாவது முதலீட்டாளர்கள் உச்சநிலை மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் பேசினார். இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவுக்குச் சமூகப் பொருளியல் மாற்றங்கள் இடம் பெற்று வருவதாகவும் வரும் ஆண்டுகளில் உலகப் பொருளியல் வளர்ச்சியின் இயந்திரமாக இந்தியா திகழும் என்றும் மோடி குறிப்பிட்டார். "இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை குறைந்திருக்கிறது. பணவீக்க விகிதம் இறங்கி இருக்கிறது. நடுத்தர வர்க்கம் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் சேர்ந்து 10,000க்கும் மேலான திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றன.