பெங்களூரு: பெங்களூரு ஊழல் தடுப்புப்படை கடந்த மூன்று நாட்களாக பெங்களூரில் அரசு அதிகாரிகள் வீட்டில் அதிரடிச் சோதனை மேற்கொண்டது. அதில் கர்நாடகத் தொழில் வளர்ச்சித் துறை யின் தலைமை அதிகாரி டி.ஆர்.சுவாமி மற்றும் அத் துறையின் பொறியியலாளர் கவு டய்யா ஆகிய இருவரிடமும் ஏராள மான தங்கம், வெள்ளி, சொத்து கள் இருப்பது தெரியவந்துள்ளன. இது குறித்து ஊழல் ஒழிப்புத் துறையின் அதிகாரி ஐ.ஜி. எம். சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டி.ஆர்.சுவாமி மற்றும் கவுடய்யா இருவரும் தங்களின் வரு மானத்துக்கு மேல் சொத்து சேர்த் திருப்பதாக புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படை யில் ஒரு வாரமாக அவர்களைப் பற்றிய விவரங் களைச் சேகரித்த தாக ஐ.ஜி.சந்திர சேகரன் கூறினார்.
அதைத்தொடர்ந்து, பெங்களூ ரில் வசிக்கும் இரண்டு அதிகாரி களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என்று மொத்தம் எட்டு இடங்களில் ஞாயிற் றுக்கிழமை ஊழல் தடுப்புப் படை சோதனை மேற்கொண்டது. இரவு வரை நீடித்த இந்தச் சோதனை களில் ஏராளமான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், சொத்துப் பத்திரங்கள் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன்படி, பொறியியலாளர் கவுடய்யா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர் களில் இரண்டு வீடுகள், 8 மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்பு களில் 14 பிளாட்டுகள், 18.2 கிலோ கிராம் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 3 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், ரூ.77 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி கணக்குகளில் ரூ.45 லட்சம் இருப்பு வைத்திருப்பதும் தெரியவந்துள்ளன. டி.ஆர்.சுவாமி மற்றும் அவரு டைய குடும்ப உறுப்பினர்களின் பெயரில் 8 வீடுகள், 11 வீட்டு மனைகள், வெவ்வேறு இடங்களில் 14 ஏக்கரில் விவசாய நிலங்கள், ஒரு கிலோ 600 கிராம் தங்கம், 7½ கிலோ வெள்ளிப் பொருட்கள், 3 கார், ரூ.4 கோடியே 52 லட்சம் ரொக்கம் ஆகியவை சிக்கின.
கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் தலைமை அதிகாரியாக இருந்து வருபவர் டி.ஆர்.சுவாமி, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியியலாளராக இருப்பவர் கவுடய்யா. படம்: ஊடகம்

