லக்னோ: நக்சலைட்டுகளை 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு ஒழித்துக் காட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய அவர், நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஆண்டுக்கு 126 தாக்குதல்கள் வரை நிகழ்ந்து வந்தன. இப்போது நக்சல்களின் தாக்குதல் ஆண்டுக்கு 12 என்ற அளவில் குறைந்து விட்டன என்று கூறினார். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை பாஜக ஆட்சி யில் குறைந்திருப்பதாகவும் கூறினார். நக்சலைட்டுகளை ஒடுக்கும் விவகாரத்தில் இந்திய ராணுவம் சிறப்பாக பணி யாற்றியுள்ளதாகவும் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.
மூன்றாண்டுகளில் நக்சலைட்டுகளை ஒழித்து விடுவோம்: ராஜ்நாத் சிங்
1 mins read

