ராஜஸ்தானில் நவம்பர் முதல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

ராஜஸ்தானில் நவம்பர் முதல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

1 mins read

ஜெய்ப்பூர்: அடுத்த மாதத்தில் இருந்து ராஜஸ்தானில் விவ சாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறி வித் தது. அதன்படி ராஜஸ்தானில் ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராஜஸ் தானில் தற்போதைய முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளி யானதைத் தொடர்ந்து ஆளும் பாஜகவும் முக்கிய எதிர்க் கட்சி யான காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின் றன.