ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: ஏர்செல்= மேக்சிஸ் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்பிணை கோரி, சிதம்பரம் மற்றும் கார்த்தி இருவரும், மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலை யில், இருவரையும் கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. நேற்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையானார். அப்போது, வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்துள்ளது.