காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை சம்பவத்தின் எதிரொலியாகப் போராட்டங்கள் அதிகரித்து வருவதோடு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுகின் றனர். இதன் காரணமாக உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 50,000 குடியேறிகள் அச்சத்தின் காரண மாக குஜராத்தை விட்டு வெளி யேறி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலிசார் இதுவரையி லும் சுமார் 35 வழக்குகளைப் பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் 180 பேரைக் கைதுசெய்துள் ளனர். குறிப்பாக வடஇந்தியர்களை இலக்காக வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜ ராத்தின் வகோடியாவில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த வெளிமாநில ஊழியர்கள் ஐந்து பேரை உள்ளூர்வாசிகள் கொடூரமாகத் தாக்கினர்.
இதுதொடர்பாக போலிசார் 16 பேரிடம் விசாரணை நடத்தினர். அதேபோல் சௌராஷ்டிர மக்கள் வாழும் கொடினார் நகரத்தில் உள்ளூர்வாசிகள் தொழிற்சாலை ஒன்றில் புகுந்து அதன் இயக் கத்தை நிறுத்துமாறு கூச்சலிட்டன ர். மாநிலம் முழுவதும் தலை விரித் தாடும் வன்முறையைக் கண்டு அஞ்சி சொந்த மாநிலங்களுக்குத் திரும்புகின்றனர் வெளிமாநிலத்து மக்கள். குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

