புதுவையில் 3 நாட்களாக பலத்த மழை

புதுவையில் 3 நாட்களாக பலத்த மழை

1 mins read

அரியாங்குப்பம்: புதுவை மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலை கள், உள்புற குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் தேங்கியது. பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மூன்று நாட்களிலும் நள்ளிரவு தொடங்கி பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் கடுமையாக மழை பெய்தால் பாதிக்கப்படுவோரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு சுமார் 700 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.