சூரத்: குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தொலாகியா, தனது நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று ஊழியர்களுக்குத் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடம்பரக் கார்களைப் பரிசளித்துள்ளார். சாவ்ஜி தொலாகியா, ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர் என்ற வைரக்கற்கள் ஏற்றுமதி நிறு வனத்தை லாபகரமாக நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் நிலேஷ் ஜடா, 40, முகேஷ் சந்த்பரா, 38, மகேஷ் சந்த்பரா, 43, ஆகிய மூவரும் 13 மற்றும் 15வது வயதில் வைரம் பட்டை தீட்டும் பணியில் சேர்ந்து 25 ஆண்டு வேலைபார்த்து தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தனர். இவர்களின் பங்களிப்பைப் பாராட்டி, மூவருக்கும் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் களை சாவ்ஜி பரிசளித்துள்ளார்.
ஊழியர்களுக்கு ரூ.3 கோடி ஆடம்பர கார்கள் கொடுத்தார்
1 mins read

