சித்தூர்: ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் எர்ரவாரிப்பாளையம் அடுத்த வெங்கடபுரம் கிராமத் தில் உள்ள ஒரு குன்றின் மீது பழமைமிக்க வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இதற்குச் சொந்தமான பெரும் புதையல் அந்தப் பகுதியில் இருப்ப தாகச் சொல்லி அண்மையில் பலரும் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபடுவதால் அந்தப் பகுதி மக்கள் பயந்துபோய் உள்ளனர். இந்த நிலையில், பட்டாபிராமன் ரெட்டி, ஓம் பிரகாஷ் ராஜ் என்ற இரண்டு மந்திரவாதிகள் அங்கு ஓர் இடத்தில் ஸ்ரீசக்கரம் அமைத்து எலுமிச்சை பழங்களைப் பறக்க விட்டு புதையல் தேடும் மாந்திரீக பணியில் ஈடுபட்டதைக் கண்டு கிராமத்தினர் அவர்களைப் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர். மந்திரவாதிகள் கைதாகினர். சிறையில் அடைக்கப்பட்டனர். புலன்விசாரணை நடக்கிறது.
பட்டாபிராமன் ரெட்டி, ஓம் பிரகாஷ் ராஜ் என்ற இரண்டு மந்திரவாதிகளும் எலுமிச்சை பழங்களை வீசி புதையலைக் கண்டுபிடிக்க முயன்று சிக்கினர். படம்: இந்திய ஊடகம்

