குளிர்சாதனப்பெட்டி வெடித்து நால்வர் பலி

குளிர்சாதனப்பெட்டி வெடித்து நால்வர் பலி

1 mins read
29dce0bc-b552-496b-a5fa-b9d84117c5a4
-

மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியர் அருகே தார்பான் காலனியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் அதிக அழுத்தம் காரணமாக குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் வீட்டின் சுவர் இப்படி இடிந்தது. இதன் காரணமாக இரு குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். காயமடைந்த இதர இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விசாரணை நடக்கிறது. வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் அழுத்தம் அளவுக்கு அதிகமாகக் கூடியதால் அந்தப் பெட்டி வெடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: இந்திய ஊடகம்