மியன்மாரில் இருந்து அகதிகள் கேரளா வருகை

மியன்மாரில் இருந்து அகதிகள் கேரளா வருகை

1 mins read

புதுடெல்லி: மியன்மார் நாட்டில் இருந்து ரோஹிங்யா அகதிகளின் ஊடுரு வலைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்புப் படைவீரர்கள் (ஆர்பிஎஃப்) மேற்கு வங்காளம், அசாமில் இருந்து தென்னிந்திய மாநிலங் களுக்கு இயக்கப்படும் 14 ரயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரு கிறார்கள். அதிக அளவிலான ரோஹிங்யா அகதிகள் இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ரயில்கள் மூலம் படையெடுப்பதாக இந் தியாவின் மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்யா இன மக்கள் அகதிகளாக தென்னிந்திய மாநிலத்துக்கு 14 ரயில்கள் மூலம் ஊடு ருவ இருப்பதாக கேரளாவுக்கும் தமிழகத் துக்கும் ரயில்வே பாதுகாப்புப் படை யும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏராளமான ரோஹிங்யா மக்கள் குடும்பம் குடும்பமாக கேரளாவுக்கு வருவ தாகவும் ரயில்களில் ரோஹிங்யா மக் களைப் பார்த்ததும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கும்படியும் ரயில்வே படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன அழிப்பு என்று கூறப்படும் வகையில் மியன்மாரில் ராக்கைன் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான ரோஹிங்யாக் கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த அகதிகள் அண்டை நாடுகளான பங்ளா தேஷ், இந்தியாவுக்குத் தப்பிச்சென்று குடியேற முயன்று வருகின்றனர்.