'நக்கீரன்' கோபால் கைதாகி விடுதலை

'நக்கீரன்' கோபால் கைதாகி விடுதலை

3 mins read
b5c01d9d-5749-4e6a-9dfd-3f552defbfa2
-

தமிழகத்தின் முன்னணி வார இதழ்களில் ஒன்றான 'நக்கீரன்' பத்திரிகையின் ஆசிரியர் ஆர். கோபாலை தமிழக போலிசார் நேற்று திடீரென கைதுசெய்து, அவர்மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்தனர். ஆயினும், திரு கோபால் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய் தது செல்லாது என அறிவித்து, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயன் றதாகக் கூறி அருப்புக்கோட்டை யைச் சேர்ந்த கல்லூரிப் பேரா சிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

அந்த விவகாரத் தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்- துக்கும் தொடர்பு இருப்ப தாகச் செய்திகள் வெளியாகின. அந்த விவகாரத்தை நக்கீரன் பத்திரிகையே முதலில் அம்பலப் படுத்தியது. மேலும் அவ்விவகாரம் தொடர்பாக அவ்வப்போது செய்தி களையும் வெளியிட்டு வந்தது. அப்படி கடந்த ஏப்ரல் மாதம் நக்கீரனில் வெளியான ஒரு கட்டுரை ஆளுநர் மீது அவதூறு பரப்புவதாகவும் அவரின் பணியில் தலையிடுவதாகவும் உள்ளது எனக் கூறி, ஆளுநர் மாளிகை சார்பில் போலிசில் புகார் அளிக்கப் பட்டது.

இதையடுத்து, புனே செல்வதற்காக நேற்றுக்காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த நக்கீரன் கோபாலை போலிசார் கைது செய்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை போலிஸ் நிலையத்தில் அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்திய பின், அவரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் தினர். அதற்குமுன் மருத்துவப் பரிசோதனைக்காக திருவல்லிக் கேணி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைச் சந்தித்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "நடப்பவற்றை எல்லாம் பார்க்கும் போது ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழு கிறது. இன்று நக்கீரன் கோபால் மீது பாயும் சட்டம் நீதிமன்றத்தையும் போலிசாரையும் இழிவுபடுத்திய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பத்திரிகையில் பணி புரியும் பெண்களைத் தரக்குறை வாகப் பேசிய எஸ்.வி.சேகர் ஆகி யோர் மீது ஏன் பாயவில்லை?" என்று கேட்டார். முன்னதாக, காவல் நிலையத் தில் திரு கோபாலைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து மதிமுக பொதுச் செயலாளர் தர்ணாவில் ஈடுபட்டார்.

அதனால் அவரையும் போலிசார் கைது செய்தனர். இந்நிலையில், எழும்பூர் நீதி மன்றத்தில் திரு கோபால் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.டி.பெருமாள் முன்னிலையானார். "124வது சட்டப் பிரிவின்கீழ் திரு கோபாலைக் கைது செய்ய முகாந்திரம் இல்லை. நக்கீரனில் வெளியான கட்டுரை மூலம் அவர் எந்த விதத்திலும் ஆளுநரை மிரட்டவில்லை. கட்டுரை மூலமாக ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது," என அவர் வாதிட்டார்.

அதேபோல, ஊடகப் பிரதிநிதி யாக முன்னிலையாகி திரு கோபாலுக்கு ஆதரவாக வாதாடி னார் 'தி இந்து' நாளிதழின் ஆசிரியரான என்.ராம். இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதி, நக்கீரன் கோபால் மீது தேச துரோக வழக்குப் பதிந்தது செல்லாது என்றும் அவரை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்றும் கூறி, அவரை விடுதலை செய்தார். விடுதலையானபின் தமக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நக்கீரன் கோபால் நன்றி தெரி வித்துக்கொண்டார்.