வெளிமாநிலத்தவர் மீது தாக்குதல்: குஜராத்தில் 431 பேர் கைது

வெளிமாநிலத்தவர் மீது தாக்குதல்: குஜராத்தில் 431 பேர் கைது

1 mins read
5e1968b3-8b06-4113-843b-b1cbb4562021
-

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 14 மாதச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தின் எதி ரொலியாக குஜராத்தில் தங்கி வேலை பார்த்துவரும் வெளிமாநிலத் தொழி லாளர்கள் மீது தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 431 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். பாலியல் வன் கொடுமை சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளையர் ஒருவர் அதே நாளில் கைதுசெய்யப்பட்டார். தற்போது மருத்து வமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தச் சிறுமி அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரி விக்கப்பட்டது.

தாக்குதல்களுக்கு ஆளாகிவிடு- வோமோ என்ற அச்சத்தில் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழி லாளர்கள், குஜராத்தில் வாழ்வதற்கு பயந்து, கூட்டம் கூட்டமாக அம்மாநிலத் தைவிட்டு வெளியேறுகின்றனர். இதன் காரணத்தினால் குஜராத்தில் இயங்கிவரும் பல தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.