ஏழை மக்களுக்கு தினமும் ஒருவேளை அன்னமிடும் இளைஞர்

ஏழை மக்களுக்கு தினமும் ஒருவேளை அன்னமிடும் இளைஞர்

1 mins read
32dc9d38-7da2-4965-a96f-c31253494799
-

நாமக்கல்: எத்தனையோ பேர் மாட மாளிகைகளுடன் கோடீஸ்வரராக வாழ்ந்து வந்தாலும் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. அப்படி பணக்கார னாக இல்லாமல் ஒரு சாதாரண வாழ்க்கை நடத்தும் ஒருவருக்கு தன்னையும் தன் குடும்பத்தின் தேவைகளையும் சமாளிப்பதே பெரும் சவாலாக இருக்கும். இந்தச் சவாலுக்கு மத்தியில் தான் மக்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த சரவண பாரதி கண்ணன். இவர் உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு தினம்தோறும் ஒரு வேளை உணவு வாங்கித் தருகிறார்.

கோவை மாவட்டம், பொள்ளாச் சியைச் சேர்ந்தவர் சரவண பாரதி கண்ணன். ஒரு சாதாரண குடும் பத்தில் பிறந்த இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது தினசரி வேலைகளில் ஒன்று தன் இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்து நிலையம், கோயில் கள், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக் க ப் ப ட் டிருப் பவர் களை நேரில் சந்தித்துச் சாப்பிட்டீர்களா என்று கேட்பதுதான். இல்லை என்று கூறுபவர்களுக் கும் பிள்ளைகள் இருந்தும் கவ னிக்க ஆளில்லாதவர்களுக்கும் உணவின்றி பசியில் வாடுபவர் களுக்கும் மதியம் ஒருவேளை தனது சொந்த செலவில் உணவு வாங்கித் தருகிறார்.

ஏழைகளுக்கு உணவு வாங்கித்தரும் பாரதி கண்ணன். படம்: ஊடகம்