தினகரன்: ஓபிஎஸ் போலவே விஜயபாஸ்கரும் சந்தித்தார்

தினகரன்: ஓபிஎஸ் போலவே விஜயபாஸ்கரும் சந்தித்தார்

1 mins read
e2d7ff18-2f88-4e66-abda-d9b7b8a859b6
-
Google News Preferred Icon

சென்னை: தமிழக துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்துப் பேசியது போலவே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் என்னைச் சந் தித்துப் பேசினார் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், "துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டு மல்ல; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நான் நடை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண் டிருந்தபோது என்னைச் சந்தித்து எனக்கு வணக்கம் கூறினார்.

இதைத் தொடர்ந்து நின்றபடியே தன்னிடம் தொடர்ந்து பேசிய தாகவும் அப்போது குறைகள் பலவற்றையும் அவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார். "உங்களுடைய குறைகளை என்னிடம் கூறாதீர்கள், இரட்டை வேடம் போடாதீர்கள்," என்று விஜயபாஸ்கரிடம் கூறியதாகவும் தினகரன் விளக்கம் அளித் துள்ளார். இதற்கிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை டெல்லியில் சந்தித்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டு மானங்கள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.