மதிமாறன்: அறிவில்லாமல் பேசுகிறார் விஜய்

மதிமாறன்: அறிவில்லாமல் பேசுகிறார் விஜய்

1 mins read
7d50e795-3f36-400b-ae31-6ce47ff1b4d5
-

சென்னை: படத்தில் பேசமுடியா மல் மிஞ்சிப்போன வசனங் களை எல்லாம் மேடையில் வந்து வாய் வலிக்கப் பேசுபவர் கள் எல்லாம் தளபதியாக முடி யாது என்று நடிகர் விஜய்யை விளாசி உள்ளார் திராவிடர் கழகப் பேச்சாளர் வே. மதிமாறன். முதலில் எம்எல்ஏ ஆனால் தான் முதல்வர் ஆகமுடியும் என்று கூட தெரியாமல் அறி வின்றி பேசி வருவதாக திமுக மகளிரணி சார்பில் நடந்த கலைஞர் வீரவணக்க பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முன்பு மதிமாறன் பேசினார். "சர்கார்' படத்தின் இசை வெளி யீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்று பேசினார். அப்போது ரசிகர்கள் அனைவரும் விஜய்யை 'தளபதி, தளபதி' என அழைத்தனர். "முதலில் எம்எல்ஏ ஆனால்தான் முதல்வர் ஆகமுடியும் என்ற அறிவே இல்லாமல் படத்தில் பேசிப்பேசி மிஞ்சிப்போன வச னங்களை எல்லாம் மேடையில் பேசுபவர்கள் எல்லாம் தளபதி ஆகமுடியாது," என்றார் மதி மாறன்.

விஜய் அந்த நிகழ்ச்சியில் தான் பேசும்போது குட்டிக்கதை ஒன்றையும் கூறினார். அந்தக் கதை அவரது ரசிகர்களுக்குப் பொருந்துமா என டுவிட்டரில் பதிவிட்டார் நடிகர் கருணா கரன். உடனே விஜய் ரசிகர்கள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கத்தொடங்கினர். இந் நிலையில் மதிமாறன் விஜய்யை கடுமையாக விமர் சித்துள்ளார்.