விஐபி தரிசனம் வேண்டாம் என மக்களோடு மாணிக்கவேல் சாமி தரிசனம்

விஐபி தரிசனம் வேண்டாம் என மக்களோடு மாணிக்கவேல் சாமி தரிசனம்

1 mins read
c3b3bec3-c6ad-4c55-a83f-df14d9592335
-
Google News Preferred Icon

கும்பகோணம்: பொதுவாக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லோரும் விஐபி தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தமிழக சிலைத் தடுப்புப் பிரிவின் ஐஜி பொன். மாணிக்கவேல் கும்பகோணத் தில் உள்ள குருபரிகார தலமான ஆபத் சகாயேஸ்வரர் கோயிலுக்குச் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது மக்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. தரிசனத்திற்குப்பின் கோயிலைச் சுற்றி வந்த அவர், கோயில் நிர்வாகிகளிடம் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

இன்றைய காலக்கட்டத்தில் அரசு அதிகாரிகள் நேர்மையாக இருப்பது அரிதிலும் அரிதாக உள்ளது. இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயமும் ஐஜி பொன். மாணிக்கவேலும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்று வருகின்றனர். அண்மைக்காலங்களில் பணக்காரர், அரசு என்று எந்த ஒரு பாரபட்சமும் இன்றி பல கோடி மதிப்புள்ள அரிய சிலைகளை பொன் மாணிக்க வேல் மீட்டுள்ளார்.