சென்னை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி துணைப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரைத் தொடர்புப்படுத்தி வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கல்லூரி மாணவிகளைத் தவ றான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெயரைக் குறிப்பிட்டு 'நக்கீரன்' இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் நான்கு முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றதாகவும் ஆளு நரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கல்லூரி மாணவிகள் பலரை அறி முகம் செய்ததாகவும் ஆளுநர் மதுரை வரும்போதெல்லாம் அவரை நிர்மலா தேவி சந்தித்துப் பேசியதாகவும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, கிண்டி ஆளுநர் மாளிகை சார்பில் போலி சில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைப் பெற்ற போலிசார், கடந்த திங்கட்கிழமை நக்கீரன் பத்திரிகை தலைமை ஆசிரியர் கோபாலை விமான நிலையத்தில் கைது செய் தனர். ஆனால், எழும்பூர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தர விட்டது. நக்கீரன் ஆசிரியரை கைது செய்வதற்குப் போதிய ஆவணங்களும் ஆதாரங்களும் சமர்ப் பிக்கப்படவில்லை என்றும் இந்திய தண்டனைச் சட்டம் 124 இதற்கு பொருந்தாது என்றும் நீதிபதி குறிப் பிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை நேற்று விளக்கம் அளித்துள்ளது. அது வெளியிட்ட அறிக்கையில் "'நக்கீரன்' இதழில் வெளியான குற்றச்சாட்டுகள் ஆளுநரின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளள.
"மதுரை காமராஜர் பல்கலைக் கழக விருந்தினர் விடுதியில் ஆளுநர் தங்கவும் இல்லை. அங்கே நிர்மலா தேவியை அவர் சந்திக்கவும் இல்லை. "நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் என வெளியான தக வல்களிலும் உண்மை இல்லை. ஆளுநரையோ செயலாளரையோ அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்திக்கவே இல்லை. "குறிப்பாக, கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை. நிர்மலா தேவி மீதான புகாரில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது.
அடிப்படை ஆதாரமற்ற புகார்களை கூறியதால், நக்கீரன் கோபால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்பட்டது. "உண்மை தெரியாமல் நக்கீரன் வந்த செய்திகளை சிலர் ஆதரிக் கின்றனர். நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களைச் சகித்துக் கொள்ள முடியாது. "ராஜ்பவனை (ஆளுநர் மாளிகை) தொடர்புப்படுத்தி வெளி யாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை," என அறிக்கை யில் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

