'திமுக-பாஜக மறைமுகத் தொடர்பு'

1 mins read

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் சீரங்ககவுண்ட னூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, "'ராகுல்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர். அவரைத்தான் பிரதமராக ஆக்குவோம் என காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருக்கிற திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லட்டும். அவ்வாறு சொல் லாமல், பின்னர் முடிவு எடுப்போம் என்று அவர் சொல்வது என்ன அர்த்தம்? அதன் பிறகு, பாஜகவுடன் கூட்டு சேரப்போகிறோம் என்பதுதான் அர்த்தம். இதுதான் திமுகவின் செயல்பாடும் நிலைப்பாடும். திமுகவைப் பொறுத்தவரை அவர்கள் மறைமுகமாக பாஜகவிடம் தொடர்பு கொண்டுள்ளனர்," என்றார்.