திருச்சி: திருச்சி விமான நிலை யத்தில் எர் இந்தியா விமானம் மோதியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர் இந்தியா விமானம் திருச்சி யிலிருந்து நேற்று அதிகாலை 1.20 மணியளவில் 136 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்கும்போது இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப் பாட்டை இழந்த விமானம், திருச்சி =புதுக்கோட்டை தேசிய நெடுஞ் சாலை அருகே இருந்த ஏடிசி டவர் எனப்படும் வான் போக்கு வரத்து மின்கட்டுப்பாட்டுக் கோபு ரம் மற்றும் சுற்றுச்சுவர் ஆகிய வற்றை இடித்துவிட்டுச் சென்றது. விமானத்தின் சக்கரங்கள் அவற்றின் மேல் மோதின.
இருப் பினும் விமானத்துக்குப் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த விமானம் திருச்சியில் தரை யிறக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானியோடு தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் அது இயல வில்லை என்று கூறப்படுகிறது. மோதியதற்குப் பிறகு எந்தத் தகவலும் தெரியாததால் பயணி களின் உறவினர்கள் கவலையில் மூழ்கினர்.
நடுவானில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பறந்த அந்த விமானம், மும்பை விமான நிலையத்தில் நேற்றுக் காலை 5.45 மணியளவில் பத்திரமாகத் தரையிறங்கியது. விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட தாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் 136 பேரும் வேறொரு விமானத்தில் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்திற்குக் காரணம் இயந்திரக் கோளாறா, ஓடுதளத் தில் பிரச்சினையா அல்லது விமா னியின் கவனக்குறைவா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்களது உயரதிகாரி களுக்கு பரிந்துரை செய்தனர். அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து அறிந்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி விமான நிலையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
விமானம் உரசியதால் சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். படம்: தமிழக ஊடகம்

