சென்னை: அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந் தது.
இந்தக் கூட்டத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "1.5 கோடி உறுப்பினர் களைக் கொண்ட அதிமுக எஃகு கோட்டையை உருவாக்கியவர் ஜெயலலிதா. நடப்பாண்டில் 60 லட்சம் பேர் கட்சியில் இணைந் துள்ளனர்," என்றார்.
"அதிமுகவில் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப் பினர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையில் அதிமுக இருந்த போது 5 ஆண்டுகளில் 1.50 கோடி பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.
தாங்கள் தலைமையேற்ற 90 நாட்களில் 1.10 கோடி பேர் உறுப் பினர்களாகச் சேர்ந்துள்ளதாக ஓபிஎஸ்=இபிஎஸ் கூறினர். ஓபிஎஸ் மேலும் கூறுகையில், "இந்த எண்ணிக்கை விரைவில் 2 கோடியாக உயரும். அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்க ளுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
"டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை," என்று கூறினார். மற்றொரு துணை ஒருங் கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறும்போது, புதிய உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் கட்சி உறுப்பினர்கள் இல்லை என்றும் சசிகலா அதிமுகவின் உறுப்பி னராக இல்லை என்றும் குறிப்பிட் டார்.

