மாயமான விஜயகாந்தின் மாடுகளை தேடும் போலிசார்

மாயமான விஜயகாந்தின் மாடுகளை தேடும் போலிசார்

1 mins read

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் சென்னை விருகம்பாக் கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றை அவர் கட்டி வரு கிறார். அந்த வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை. அவற்றை திருடர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

வீட்டின் காவலர்கள், மாடுகள் காணாமல் போனதை விஜயகாந்த் வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் மாடுகள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வரு கிறது.

வெள்ளிக்கிழமையும் அது வுமாக புதுவீட்டில் கட்டிவைக்கப் பட்டிருந்த பசு மாடுகள் திருட்டு போனதாக விஜயகாந்த் குடும்பத்தினர் கவலையில் இருப்பதாக அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து போலிசார் கூறுகையில், ``விஜயகாந்த் வீட்டில் வளர்க்கப்பட்ட மாடுகள் மாயமானது குறித்து கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்திவருகிறோம்.

"மூன்று மாடுகள் வளர்க்கப் பட்ட இடத்தில் இரண்டு மாடுகள் மட்டுமே மாயமாகியுள்ளன. மாடு கள் திருடப்பட்டிருந்தால் மூன்று மாடுகளையும் மர்மநபர்கள் கொண்டு சென்றிருப்பார்கள். "ஆனால், இரு மாடுகள் மட்டுமே மாயமாகியுள்ளன. எனவே, நள்ளிரவில் மாடுகளே திறந்துகிடந்த கதவு மூலம் வெளியில் சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம்.

"அதனால், அப்பகுதிகளில் மாடுகளைத் தேடிவருகிறோம். மேலும் கட்டப்பட்டு வரும் வீட் டைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கருவிகளின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.