சென்னை: ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் நக்கீரன் ஆசிரியருடன் சேர்க்கப்பட்டிருந்த அந்த இதழின் ஊழியர்கள் 34 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாம்பஜார் காவல் நிலையம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், நக்கீரன் அலுவலக ஊழியர்களைக் கைது செய்யமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். இது தொடர்பாக நீண்ட விவரமான பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு காலஅவகாசம் தேவைப்படுவதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நக்கீரன் ஊழியர்களைக் கைது செய்யமாட்டோம்: போலிஸ் உறுதி
1 mins read

