கனிமொழி: பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டோரை விசாரிக்க வேண்டும்

கனிமொழி: பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டோரை விசாரிக்க வேண்டும்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தமது டுவிட்டர் பக்கத்தில், ‚"#MeToo பிரசாரம் இன்னும் பல விவாதங்களைக் காண வேண்டும்," என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர், "உண்மை இந்த உலகுக்குச் சொல்லப்பட வேண்டும். இந்த முயற்சி பாலியல் அத்துமீறல் களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். முகமூடிக்குப் பின் ஒளிந் திருக்கும் முகங்களை அடையாளம் காட்டும் பெண்களை நாம் ஆதரிப்போம். பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை அல்ல," எனப் பதிவிட்டுள்ளார்.